தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரையில் குடும்ப பிரச்னையை போஸ்டர் அடித்த காமெடி! - madurai family conflicts poster

மதுரை: குடும்ப பிரச்னையை போஸ்டர் அடித்து ஒட்டிய நபரின் நகைச்சுவையான செயல் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

மதுரையில் குடும்ப பிரச்னையை போஸ்டர் அடித்த காமெடி!

By

Published : May 25, 2019, 1:28 PM IST


மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்பவர் தன் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில காலங்களாக மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் மனைவி, குழந்தைகளுக்கு கடந்த 22ஆம் தேதி காதணி விழா நடத்த முடிவு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு கர்ணன், அவர் உறவினர்கள், நண்பர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்பதை முடிவு செய்திருக்கின்றனர்.

இதனையடுத்து, குழந்தைகளின் காதணி விழாவில் கலந்து கொள்ளாததிற்கு விளக்கம் அளித்து மதுரை முழுவதும் கர்ணனின் குடும்பத்தினர் தெருக்களில் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்.

அதில், 'நானும் என் மனைவியும் பிரிந்து வாழந்துவரும் நிலையில் எனது மாமியார் குடும்பத்தினரின் துண்டுதலின்படி, என் பிள்ளைகளுக்கு நடக்கும் இந்த காதணி விழாவில், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆகவே ஏற்கனவே செய்முறை செய்தவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் பொது மக்கள் இடையே பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியது. மேலும் அந்த சுவரொட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details