மதுரையில் கடந்த சில நாட்களாக மழை மேகமாக காணப்பட்ட நிலையில், இன்று (டிச. 31) மாவட்டம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில், மதுரையில் இன்று (டிச. 31) காலை 10 மணி முதல் பரவலாக மழை பெய்துவருகிறது.
இதையடுத்து மதுரையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோன்று புறநகர் பகுதிகளான சிலைமான், கருப்பாயூரணி, வரிச்சியூர், ஒத்தக்கடை, அழகர்கோவில், கள்ளந்திரி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.