தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருமணத்தை மீறிய உறவு; நண்பனை அடித்து கொன்ற உயிர் நண்பன்! - advocate murderd

மதுரை: திருமணத்தை மீறிய காதல் விவகாரத்தில் வழக்கறிஞரை உயிர் நண்பனே அடித்து கொலை செய்து உடலை வைகையாற்றில் வீசிச் சென்ற கொடுர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கள்ள காதல் விவகாரம் -  நண்பனை உயிர் நண்பனே அடித்து கொலை
கள்ள காதல் விவகாரம் - நண்பனை உயிர் நண்பனே அடித்து கொலை

By

Published : Oct 11, 2020, 3:57 AM IST

மதுரை மாவட்டம் சோழவந்தான் சாலை அருகே துவரிமான் வைகையாற்றங்கரையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சாக்ரடீஸ் (எ) தேவா கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் சாக்ரடீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக மதுரை அரசு ராஜாஜி மருந்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்த சாக்ரடீஸ் (எ) தேவா மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வழக்கு சம்மந்தாக மதுரை நீதிமன்றத்திற்கு ஆஜராக மதுரை வருவது வழக்கம்.

அப்போது தனது நண்பரான செந்தில் என்பவர் மது அருந்த தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

மதுபோதையில் செந்தில், சாக்ரடீஸ் அவரது மனைவியுடம் தகாத உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் செந்திலின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் செந்தில் சாக்ரடீஸை நேற்று கொலை செய்துள்ளார். இதையடுத்து செந்தில் மற்றும் அவரது நண்பர் சையது ஜாபர் ஆகிய இருவரும் இறந்த சாக்ரடீஸ் உடலை ஆட்டோவில் ஏற்றி சென்று சோழவந்தான் சாலை துவரிமான் பகுதி வைகை ஆற்றங்கரையோரம் வீசிச் சென்றது தெரிய வந்துள்ளது.

தகாத உறவு விவகாரத்தில் தனது மனைவியை தன்னிடமிருந்து பிரித்ததால் வழக்கறிஞரான தனது நண்பனை அடித்து கொலை செய்து உடலை வைகை ஆற்றங்கரையோரத்தில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details