இந்திய தொழில்நுட்பகழகங்களில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தி மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரப்படுத்துதல் துறை அமைச்சா் தவார் சந்த் கெலாட்டுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினா் சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், "கடந்த ஐந்து ஆண்டுகளில் 23 இந்திய தொழில்நுட்பக்கழகங்களில் 25,007 ஆய்வு மாணவா்கள் சோ்க்கப்பட்டதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து 9 விழுக்காடு மாணவர்களும் பழங்குடியினா் சமுதாயத்திலிருந்து 2.1 விழுக்காடு மாணவர்களும் உள்ளனா். ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் படி தாழ்த்தப்பட்டோருக்கு 15 விழுக்காடும், பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மேலும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய 27 விழுக்காடில் 23.2 விழுக்காடே ஒதுக்கப்பட்டுள்ளன. மாறுதலாக சட்டப்படி ஒதுக்கப்பட்ட இடங்களில் உருவான காலி இடங்களில் பொதுப்பிரிவு மாணவா்களை சேர்த்ததால் அவர்களின் சேர்க்கை 65.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது.