மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தேவரின் திருவுருவச் சிலைக்கு பால்குடம், காவடி, அலகு குத்துதல், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேத்திக்கடனை பொதுமக்கள் செலுத்தினர். இந்நிகழ்வில் மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.