தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எம் சாண்ட் கிரஷர் பணி: ஆய்வுசெய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - Perambalur

மதுரை: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே ‘எம் சாண்ட் கிரஷர்’ இயங்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரிய வழக்கு தொடர்பாக லால்குடி வட்டாட்சியர் நேரில் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே ‘M sand கிரஷர்’ பணி ஆய்வுசெய்ய உத்தரவு
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே ‘M sand கிரஷர்’ பணி ஆய்வுசெய்ய உத்தரவு

By

Published : Jun 22, 2021, 6:21 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த பொதுநல மனுவில், "திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் நெய்குளம் பஞ்சாயத்துக்குள்பட்ட சொக்கலிங்கபுரம் கிராமத்தின் அருகே கோயம்புத்தூர் மினரல்ஸ் M Sand Unit III நிறுவனம் M Sand, B Sand தயாரிப்பதற்காகப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இதன் அருகில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் கிரஷர் பணி செயல்பட்டால், பள்ளி மாணவ மாணவிகள் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மாசுக்காற்று பரவும்.

இதனால், அதன் அருகில் சுற்றியுள்ளவர்கள் அனைவருக்கும் சுவாசக்கோளாறு சம்பந்தமான நுரையீரல் தொற்று, இதய கோளாறு போன்ற நோயால் பாதிக்கப்பட நேரிடும்.

அதனைச் சுற்றியுள்ள வேளாண் நிலம் மற்றும் தமிழ்நாடு அரசு வனத் துறையில் உள்ள மரம், செடி, கொடி வளராமல் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு அழிந்துவிடும். தற்பொழுது கரோனா என்ற பெருந்தொற்று மனித இனத்தினை அழிக்க நேரிட்டுவருகின்றது. மாசுக்கட்டுப்பாட்டினை கொண்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால் கரோனா தொற்று பரவுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, கோயம்புத்தூர் மினரல்ஸ் M Sand Unit III இயங்குவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்ய உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "M sand கிரஷர் நடத்த அனுமதி அளித்த இடத்தை லால்குடி வட்டாட்சியர் நேரில் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details