தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு - குரூப் 1 பணியிட நியமனம்

மதுரை: தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடைவிதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விரிவான உத்தரவுக்காக உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

tamil
tamil

By

Published : Nov 4, 2020, 6:32 PM IST

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், "நான் மதுரை சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பை தமிழ் வழியில் பயின்று 2017இல் வழக்கறிஞராகப் பதிவு செய்தேன்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி ஒன்றாம் தேதி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் (DSP), வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. அதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன்.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, எழுத்து தேர்வும் எழுதினேன். அதைத்தொடர்ந்து, பிரதான எழுத்துத் தேர்வு அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் டிசம்பர் 9இல் வெளியிடப்பட்டது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தெரிவு செய்யப்படவில்லை.

விதிப்படி தமிழ் வழியில் கல்வி பயின்றவருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது. அந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நான் தகுதியானவனாக இருப்பினும் எனக்கு அந்தச் சலுகை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து, விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது.

தொலைநிலைக் கல்வியில் பயில்வோர் சில பாடங்களை ஆங்கில வழியில் பயில்கின்றனர், சில பாடங்களை தமிழ் வழியில் படிக்கின்றனர். ஆகவே, இவர்களை தமிழ் வழியில் பயின்றவர்களாக கருத இயலாது. இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டபோது, எவ்விதத் தகவலையும் வழங்கவில்லை.

TNPSC-யின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலைக் கல்வி பயின்றவர்களே பெற்றுவருகின்றனர். ஆகவே தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும்.

தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். தொலைநிலைக் கல்வியில் அல்லாமல், கல்லூரிக்குச் சென்று தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப் 1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி,கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழ் வழியில் படித்தவர்கள் என்றால் பள்ளியில் இருந்து தமிழ் வழி கல்வி பயின்றவர்களா அல்லது பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா, நீதிபதிகள் தமிழ் நாட்டில் தமிழ் வழி கல்வியில் படிப்பவர்கள் குறைந்து வருகின்றனர். அதற்காகத்தான் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

பட்ட படிப்பு மட்டும், தமிழ் வழியில் படித்தால் போதுமா அதன் நோக்கமே சிதைந்துவிடும் இதே நிலை நீடித்தால், தமிழ்நாட்டில் தமிழ் இல்லாமல் மறைந்து விடும். தமிழ்நாட்டில் தமிழ் வாழவில்லை என்றால், வேறு எங்கும் வாழ முடியாது. எனவே, அஞ்சல் வழியில் தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு, இந்த 20 சதவீத ஒதுக்கீட்டில் இடம் வழங்க மாட்டாது என அரசாணையில் திருத்தம் கொண்டு வந்தால்தான், TNPSC குருப் 1 தேர்வு நடத்த வேண்டும்.

எனவே, ஏன் அது வரை TNPSC குருப் 1 தேர்வு நடத்த தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விரிவான உத்தரவுக்காக வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details