தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - quarry

திருநெல்வேலியில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் எனவும் கல் ஜல்லி மற்றும் எம்சான்ட் போன்ற கனிமங்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

By

Published : Aug 12, 2022, 9:52 PM IST

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரியில் பாறை சரிந்த விபத்தில் 4 பேர் பலியாயினர். இதை தொடர்ந்து மாவட்டத்தில் குவாரிகள், கிரசர்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பல குவாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், நெல்லை மாவட்ட குவாரிகள் சங்கம் சார்பாக முறையாக அனுமதி பெற்று செயல்படக்கூடிய குவாரிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும், மாவட்ட ஆட்சியரால் விதிக்கப்பட்ட அபராத தொகை ரத்து செய்து வழக்கம் போல் குவாரிகளில் இருந்து கற்களை லாரிகள் மூலம் ஏற்றி செல்ல டிரான்சிட் பாஸ் அனுமதியை வழங்க,

நெல்லை புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குநர் அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.

அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம். மேலும் கல், ஜல்லி மற்றும் எம்-சான்ட் போன்ற கனிமங்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என உத்தரவு பிறப்பித்த நீதிபதி, விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 300 கோடி ரூபாய் மாவட்டம் நிர்வாகம் சார்பாக குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யவும்,

குவாரிகளை மீண்டும் அளவீடு செய்து விதிமுறை மீறி இருந்தால் அபராதம் விதிப்பது குறித்து புதிய நோட்டீஸ் வழங்கலாம் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சர்ச்சைக்குரிய புத்தகங்கள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதா உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details