தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தனியார் மேட்ரிமோனியல் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்! - bharat matrimonial

மதுரை: மேட்ரிமோனியல் இணையதளங்களில் போலி கணக்குகளை நீக்கக்கோரிய வழக்கில், டாட் காம், பாரத் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Jul 9, 2019, 10:48 PM IST

திருச்சி பெற்றோர் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ஜெயந்திராணி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ்நாட்டில் மணமகன், மணமகள் தேடலுக்காக மேட்ரிமோனியல் இணையதளங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

மேட்ரிமோனியல் இணையதளம் ஒன்றில், கணவரை இழந்து, பெண் குழந்தையுடன் வாழும் பெண் மருத்துவர் ஒருவர், மறுமணம் செய்ய முடிவு செய்து தனது விபரங்களை பதிவு செய்துள்ளார். இவரது விபரங்களை தெரிந்த அஜய் என்பவர், தான் அமெரிக்காவில் மருத்துவராக இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் அப்பெண்ணுடன் பாலியல் ரீதியாக உறவு கொண்டும், அவசர தேவை என்று கூறி இரண்டு தவணைகளில் ரூ.18 லட்சம் பணத்தையும் பெற்று இருக்கிறார். பின்னர் அப்பெண்ணுடன் பேசுவதை நிறுத்தி கொண்ட அவர், வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. இது தொடர்பாக விசாரணையில் அஜய் பல்வேறு பெயர்களில் மேட்ரிமோனியல் இணையதளங்களில் போலியாக கணக்கு வைத்து கொண்டு பல பெண்களிடம் திருமணம் செய்வதாகக் கூறி லட்சக்கணக்கான பணம், நகை என ஏமாற்றியது தெரிய வந்தது. இது போன்ற மோசடிகளை தவிர்க்கும் வகையில், தனியார் மேட்ரிமோனியல் இணைய தளங்களில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்தவும், அதை கண்காணிக்கவும், வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஷாதி டாட் காம், பாரத் மேட்ரிமோனியல் உள்ளிட்ட பத்து தனியார் திருமண இணைய தளங்களையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு, வழக்கில் சேர்க்கப்பட்ட பத்து தனியார் திருமண இணையதள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details