தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘இலவச கழிப்பறை அமைக்க உடனடி நடவடிக்கை எடுங்கள்!’ - உயர்நீதிமன்றம் - உடனடி நடவடிக்கை எடுங்கள்

மதுரை: தமிழ்நாட்டில் கட்டணமில்லா கழிப்பறை அமைக்க கோரிய மனுவில், உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலவசக் கழிப்பறை அமைக்க உடனடி நடவடிக்கை எடுங்கள்! உயர்நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Apr 26, 2019, 12:05 AM IST

தமிழ்நாட்டில் பொது இடங்களில் சுகாதாரமான கட்டணமில்லா கழிப்பறைகள் அமைக்கக் கோரிய வழக்கில், டெல்லியில் உள்ள நடைமுறையைத் தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காகத் தமிழ்நாடு அரசு, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து, டெல்லிச் சென்று ஆய்வு செய்து, இங்கு அதை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த சரவணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details