தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு! - high court bench

மதுரை: கரோனா பரவலை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகள் எடுத்து வருவதால், பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

campaign
campaign

By

Published : Jan 19, 2021, 12:06 PM IST

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்," இந்தியாவில் தற்போது கரோனாவின் இரண்டாம் அலை பரவி வருகிறது. இச்சூழலில் அதிக கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். ஆனால், கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர்.

ஆகவே, கரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும் வகையில் அரசியல் கட்சியினரின் பேரணி, கூட்டம், பிரச்சாரம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு, கரோனா தொற்று தடுப்பில் அரசு போதிய கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், எனவே இதில் நீதிமன்றம் புதிதாக உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'சொந்தத் தொகுதியில்கூட முதலமைச்சர் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை': ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details