தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மோசடி வழக்கு: விசாரணை செப். 16-க்கு ஒத்திவைப்பு - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் பணமோசடி வழக்கில் பிணை கோரி தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மோசடி வழக்கு
ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மோசடி வழக்கு

By

Published : Sep 8, 2021, 1:43 PM IST

மதுரை: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகிய இருவரும் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பண மோசடி வழக்கில் ஏழு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகியுள்ள அகிலாண்டம், நிதி நிறுவன அலுவலகப் பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை கோரி மனு தாக்கல்செய்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், இந்த வழக்கு விரைவில் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட உள்ளது எனத் தெரிவித்தனர். தொடர்ந்து நீதிபதி,

  • நிதி நிறுவனம் நடத்திய இவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன,
  • இவர்களுக்கு எங்கெல்லாம் சொத்துகள் உள்ளன,
  • அதன் முழு விவரங்கள் என்ன,
  • எவ்வளவு சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன,
  • இவர்களுக்கு குவைத் - மலேசியாவில் நிறுவனங்கள் உள்ளனவா

நிறுவனங்கள் இருந்தால் அதன் முழு விவரங்களையும் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: விநாயகர் ஊர்வலம்: தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details