நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ அப்பாவு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நெல்லை மாவட்டத்திலுள்ள கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைய, இப்பகுதி மக்கள் தங்களது நிலங்களை கொடுத்து உதவினர். நிலம் வழங்கியவர்களுக்கு அணுமின் நிலையத்தில் கல்வி தகுதியின் அடிப்படையில் சி மற்றும் டி பிரிவு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என 12.02.1999-ல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவானது.
இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் தேர்வு தொடர்பாக ஏப்ரல் 18-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பாணையில் அணுமின் நிலையம் அமைய நிலம் அளித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர் தேர்வு தொடர்பான வழக்கு - உயர் நீதிமன்றம் முடித்துவைப்பு - கூடங்குளம் அணு மின் நிலையம்
மதுரை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் தேர்வு முறையில், அணுமின் நிலையம் அமைய நிலம் அளித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிடக் கோரிய மனுவை, பொது நல வழக்காக கருதமுடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை
இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு 1999-ம் ஆண்டின் ஒப்பந்தப்படி சி மற்றும் டி பிரிவு வேலையில் முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் நேற்று (நவ.18) விசாரணைக்கு வந்தது. அப்போது, பணியாளர் நியமனம் தொடர்பான வழக்கை, பொது நல வழக்காக கருதமுடியாது என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.