தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ரவிச்சந்திரனுக்கு 5ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு' - தமிழ்நாடு அரசு உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிசீலனையின் அடிப்படையில் பரோல்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரிசீலனையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 5ஆவது முறையாக பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

பரோல் நீட்டிப்பு
பரோல் நீட்டிப்பு

By

Published : Mar 16, 2022, 10:54 PM IST

மதுரை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு, 30 நாட்கள் பரோல் வழங்க ரவிச்சந்திரன் தாயார் முதலமைச்சருக்கு மனு அளித்தார்.

மேலும் இதுதொடர்பாக, ரவிச்சந்திரனின் தாயார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின் அடிப்படையில் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த நவ.11ஆம் தேதி மாலை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பரோலில் வெளிவந்த ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் அவருக்குத் தொடர்ந்து 5ஆவது முறையாக பரோல் வழங்கி, மேலும் 30 நாட்கள் விடுப்பு அளித்து இன்று (மார்ச் 16) சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பரோல் நீட்டிப்பு

'தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பநாயக்கன்பட்டியில் வசிக்கும் இவரது தாயார் ராஜேஸ்வரியை உடனிருந்து கவனித்துக் கொள்வதற்காகவும், தொடர் மருத்துவப் பரிசோதனைக்காகவும் 30 நாட்கள் கூடுதலாகப் பரோலை நீட்டிக்க வேண்டும்' என அவரது குடும்பத்தினர் மனு அளித்த நிலையில் சிறைத்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனை அடுத்து ரவிச்சந்திரனுக்கு 5ஆவது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர் ஏப்.16 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரவிச்சந்திரன் குடும்பத்தினரை விடுத்து, மற்ற நபர்களை சந்திக்கக் கூடாது, பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது உள்ளிட்டப்பல்வேறு நிபந்தனைகளுடன் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'உங்களைப் பார்க்க ஓடோடி வந்தோம் அங்கிள்' - மு.க.ஸ்டாலினை பார்த்த நரிக்குறவர் இன மாணவிகள் நெகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details