மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சாத்தான்குளம் வழக்கின் குற்றவாளி ஜாமீன் மனுவிற்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவு - உயர் நீதிமன்றக்கிளை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகிய சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், ஜாமீன்கோரிய வழக்கில் சிபிஐ தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அதில், 'சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நான் உட்பட 9 பேர் மதுரை சிறையில் உள்ளோம்.
இந்த வழக்கில் உள்ள 105 சாட்சிகளில் 22 பேரை மட்டுமே இதுவரை விசாரித்து உள்ளனர். 20 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்றக்காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளோம். விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சிபிஐ தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தனுஷ் ஆரம்பத்தில் என்னைவிட கஷ்டப்பட்டவர் - எதற்காக இவ்வாறு சொன்னார் இயக்குநர் கஸ்தூரி ராஜா?