தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் உயிரிழந்த மாணவன்... ரூ.7.60 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு... - நீச்சல் பயிற்சியின் போது மாணவன்

பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் உயிரிழந்த தனது மகனின் இறப்பிற்கு இழப்பீடு தரக் கோரி மாணவனின் தாயார் தொடர்ந்த வழக்கில், ரூ.7.60 லட்சம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 10, 2022, 7:31 AM IST

மதுரை:விருதுநகரைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எனது மகன் ஆனந்த கிருஷ்ணன் விருதுநகர் மாவட்டம் மேலக்கோட்டை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தான். மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தில் தங்கி அத்தலிட்டிக் (Athelete) பயிற்சியும் பெற்று வந்தான்.

இந்நிலையில், அங்கு அவன் பயிற்சி பெற்று வந்த மைதானத்திற்குள் உள்ள ஒரு நீர்நிலை குளத்தில் விழுந்து இறந்துவிட்டதாக, எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரித்தபோது, அந்த விளையாட்டு பயிற்சி மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் தனது மகன் நண்பருடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.

ஆகவே, மாவட்ட நிர்வாக கவனக்குறைவால் தான், எனது மகன் இறந்து விட்டான். கணவனை இழந்து வாழும் எனக்கு மகனும் இறந்து விட்டதால், அவனுக்கு உரிய இழப்பீடு பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார். இந்த மனு 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், மாணவன் இறப்பு குறித்து விசாரணை செய்து மாவட்ட பயிற்சி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. நிர்வாக கவனக்குறைவின் காரணமாக மாணவர் உயிரிழந்து உள்ளார். எனவே, ஏழ்மை நிலையில் உள்ள மாணவனின் தாயாருக்கு அரசு 7 லட்சத்து ரூ.60 ஆயிரம் (வருடத்திற்கு 6% வட்டி உடன் இன்றைய நாள் வரை) வழங்கவேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: அரசு ஆவணங்களில் சேரி, குப்பம், காலனி பெயர்களை நீக்கக்கோரிய மனு - வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details