மதுரையைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரை ரூ.1 கோடி பணம் கேட்டு, 2013ஆம் ஆண்டில் கடத்தல் கும்பல் ஒன்று கடத்தியது. பின்னர் ரூ.15 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு கடத்தல்காரர்கள் அவரை விடுவித்தனர்.
இந்த வழக்கில் முனியாண்டி என்ற முனிராஜ், கணேசன் என்ற புஷ்பராஜ் உள்ளிட்ட ஏழு பேரை தெப்பக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் 2017ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு,"வழக்குத் தொடர்பான ஆவணங்களை சீக்கிரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது உட்பட்ட உத்தரவுகளை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. தற்போதைய வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. இதேபோல கருணாகரன், ஜெபமணி நாடார் ஆகியோரின் மற்றொரு வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களைத் தீவிரமாக பின்பற்றியது போல் இந்த வழக்கிலும் செய்ய வேண்டும். அது நடக்காத காரணத்தால்தான் குற்றவாளிகள் விடுதலையாகின்றனர்.