மதுரை:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆக்கிரமிப்பிலுள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான இடங்களை அளவீடு செய்யக் கோரிய மனுவிற்கு, நில அளவைருக்கு உரிய கட்டணம் செலுத்தினால் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆதீனம் சார்பில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 'ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் பல்வேறு மாவட்டத்தில் உள்ளன. இதில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா மனம்காத்தான் கிராமம் பகுதியில் 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த இடத்தை முறைப்படி அரசு நில அளவைக் கொண்டு அளவீடு செய்ய உத்தரவிடுமாறு' மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.