தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஏப். 30-க்குள் ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவு

மதுரை: ஏப்ரல் 30ஆம் தேதிக்குள்ளாக தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

By

Published : Mar 2, 2021, 4:19 PM IST

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவு!
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டம் கிடாத்திருக்கை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "பதவி உயர்வில் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டு சொந்த மாவட்டமான திருநெல்வேலியில் காலியிடம் இல்லாததால் கிடாத்திருக்கைக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன்.

2020ஆம் ஆண்டுக்கு நடக்கவேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு கரோனா தீநுண்மி தொற்றுப் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் பலருக்கு உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும்.

எனவே, பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த தடைவிதிக்க வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள்ளாக பொதுமாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க...சட்டப்பேரவை தேர்தல்: மார்ச் 6, 7 காங்கிரஸின் நேர்காணல்!

ABOUT THE AUTHOR

...view details