தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு அலுவலக கட்டங்களின் தரம் குறித்த வழக்கு .. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு அலுவலக கட்டடங்களின் தரம் குறித்த வழக்கில் எட்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 6, 2022, 7:57 AM IST

மதுரை: தமிழகத்தில் ஆட்சியர் அலுவலக கட்டடங்கள், அரசு மருத்துவமனை கட்டடங்கள் உட்பட அனைத்து அரசு கட்டங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கக் கோரிய வழக்கில், மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து தமிழக அரசு எட்டு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராஜு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் "தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் கட்டடங்கள் மற்றும் அரசு மருத்துவமனை கட்டடங்களின் தரம் மற்றும் கட்டடத்தின் ஆயுட்காலம் ஆகியவற்றினை ஆய்வு செய்யவும் இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு அரசு கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளது.

இதனால், பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அரசு கட்டடங்களை ஆய்வு செய்வதற்காக குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரியிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே அரசு கட்டடங்களின் தரம் மற்றும் ஆயுட்காலங்களை ஆய்வு செய்ய குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வில் நேற்று (அக்.5) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்து சட்டத்திற்கு உட்பட்டு எட்டு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: மகனுக்காக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த தந்தையும், மகனும் சிறையில் அடைப்பு

ABOUT THE AUTHOR

...view details