மதுரை:டியூஷன் சென்ற மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கு தஞ்சாவூர் கீழமை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை ரத்து செய்ய கோரி இளவரசன், கார்த்திக் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை இன்று (அக்.17) விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த வெங்கடேஷ் வழங்கிய உத்தரவில், டியூஷன் படிக்கச் சென்ற மாணவியை கடத்தி 6 நபர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி உள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு எந்த பாலியல் துன்புறுத்தலும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவரிடம் அளித்த வாக்குமூலம், மருத்துவ சோதனை ஆகியவற்றின் மூலம் மாணவி பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பொய் கூறலாம். ஆனால், மருத்துவர் அறிக்கைகள் பொய்யாக இருக்காது.