மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சின்ன சொக்கிகுளம் அருகேயுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு உள்ளது. இந்நிலையில் மாரியப்பன் நேற்று சின்ன சொக்கிகுளம் வங்கிக்கு சென்று, தனது வங்கி கணக்கில் 2.5 லட்சம் ரூபாயைக் காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அலுவலர்கள், மாரியப்பனின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாரியப்பனின் கணக்கை ஹேக் செய்து, வங்கி ரசீதில் (செலான்) கையெழுத்தைப் பதிவு செய்து, அதன் மூலம் 2.5 லட்சம் ரூவாயை அபகரித்துச் சென்றது தெரிய வந்தது.