மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். இந்நிலையில் ராஜன் செல்லப்பாவின் மகன் வழி பேத்தியான, ஆறாம் வகுப்பு பயிலும் அதிதி, தன்னுடைய தாத்தாவுக்கு ஆதரவாக திருப்பரங்குன்றம் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
தாத்தாவுக்காக பரப்புரை செய்த பேத்தி! - மதுரையில் ருசிகரம்! - ராஜன் செல்லப்பா
மதுரை: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து அவரது பேத்தி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
adhidhi
அதன்படி, இன்று தனது வீட்டின் முன்புறத்திலிருந்து பரப்புரையை தொடங்கிய அதிதி, தனது தாத்தாவிற்கு வாக்களிக்குமாறு அங்கு கூடியிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து தன்னுடைய தாத்தா ராஜன் செல்லப்பாவின் அருகில் நின்று கொண்டு, இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: மதுரை அதிமுக திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!