மதுரை:பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சர்மிளா தேவி (29). இவர் கடந்த ஆறு மாதங்களாக வயிறு வீக்கம், வயிற்று வலி காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து, அவர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் 30க்கு 30 செ.மீ., அளவில் சினைப்பை நீர்கட்டி ஒன்று அவரது வயிற்றில் இருந்தது. சினைப்பை நீர்கட்டி என்பது சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் ஏற்படுகிறது. இந்த கட்டியால் அப்பெண் அவதிபட்டு வந்தது தெரியவந்தது.
மருத்துவர்கள் சாதனை