தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து - 8 பேர் காயம்

மதுரை: பழங்காநத்தம் சரவணா ஸ்டோர் அருகே அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. 8 பேர் காயமுற்றனர்.

govt. bus met an accident in madurai
மதுரையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

By

Published : Mar 29, 2021, 11:12 AM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் டெப்போவுக்கு சொந்தமான TN58 N-1888 என்ற பேருந்து, ஆரப்பாளையம் செல்வதற்காக இரவு 11 மணியளவில் திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் ஜனகர் (50) ஓட்டி வந்துள்ளார்.

பேருந்தானது பழங்காநத்தம் அழகப்பன் நகர் ரயில்வே கேட் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பு சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் பேருந்தை இயக்கிய ஓட்டுநர், நடத்துனர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இந்தப் விபத்தில் 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அருகிலிருந்த சுப்ரமணியபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அவசர கால வாகனம் மூலம் பேருந்தில் சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மதுரையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

விபத்து குறித்து போக்குவரத்து காவல்துறையினர், சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் லிங்க பாண்டி மற்றும் திலகர் திடல் சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையாளர் ரமேஷ் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து விபத்தில் சிக்கி சாலையில் தலைகீழாக கவிழந்து கிடந்த பேருந்தை ஒரு மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு அப்புறப்படுத்தினர்.

இதையும் படிங்க: நெல்லூர் வேன் விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details