மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே தினைக்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சில ஆண்டுக்கு முன் ரூ.1.20 கோடி செலவில் மூன்று மாடி வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.
தரமின்றி கட்டப்பட்டதால், புதிய கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வகுப்பறைக்குள் மாணவர்கள் அமர வைக்கப்படவில்லை. இது குறித்து செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து பொதுநல மனுவாக (2018இல்) விசாரித்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆஜராகி, கட்டட விரிசல் ஏற்பட்ட பகுதியில் பூச்சு பணிகள் நடந்துள்ளன. இது போதுமானதல்ல. புதிய கட்டடத்தோடு கட்டப்பட்ட கழிப்பறை மோசமான நிலையில் உள்ளது என்றார்.