துபாயிலிருந்து மதுரை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், அலுவலர்கள் மதுரை வந்த 141 விமான பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையில், பெண்கள் இருவரின் உடைமைகளில் 850.80 கிராம் கடத்தல் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல்செய்த அலுவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.