தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காந்தி நினைவுநாளில் பள்ளி குழந்தைகளுக்காக அமைதி சங்கம் - Gandhi Museum

மதுரை: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவுநாளையொட்டி மதுரையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்காக அமைதி சங்கம் இன்று தொடங்கிவைக்கப்பட்டது.

Gandhi
Gandhi

By

Published : Jan 30, 2021, 4:57 PM IST

மதுரையில் உள்ள செசி உள்ளிட்ட பல்வேறு காந்தி அமைப்புகள் இணைந்து தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவுநாளை ஒட்டி மதுரையில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் காந்தி தத்துவங்களைப் போதித்த அன்பு, அமைதி ஆகிய பண்புகளை குழந்தைகளிடையே வளர்க்கும்விதமாகவும் அமைதி சங்கம் என்ற பெயரிலான அமைப்பு ஒன்று காந்தி நினைவு அருங்காட்சியாக இயக்குநர் நந்தாராவால் இன்று தொடங்கிவைக்கப்பட்டது.

காந்தி நினைவுநாளில் பள்ளி குழந்தைகளுக்காக அமைதி சங்கம்
இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளரும் டாக்டர் திருஞானம் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான சரவணன் கூறுகையில், “எங்கள் பள்ளி ஆசிரியர்கள் சார்பாக நாங்கள் மதுரையின் பல்வேறு பகுதிகளில் வீதி வகுப்புகளை நடத்திவருகிறோம். அதன் தொடர்ச்சியாக காந்திய தத்துவங்களை பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரிடம் இளம்பருவத்திலேயே தோற்றுவிக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
அதனை வலியுறுத்தியும் அன்பு, அமைதி ஆகிய பண்புகளை உருவாக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் அவரவர் வீதிகளில் அமைதி சங்கம் என்ற பெயரில் இயங்குவதற்கு முயற்சி மேற்கொண்டுவருகிறோம். அந்த அடிப்படையில் அதன் தொடக்க விழா மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இன்று நடைபெற்றது” என்றார்.
காந்தி நினைவுநாளில் பள்ளி குழந்தைகளுக்காக அமைதி சங்கம்
முன்னதாக பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் காந்தி வைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details