தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தபால் துறை சிறுசேமிப்பு திட்டத்தில் மோசடி : 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை - தபால் துறை சிறுசேமிப்பு

தபால் துறை சிறுசேமிப்பு திட்டத்தில் மோசடி செய்ததாக தபால் ஊழியர் உட்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் அபதாரம் விதித்து மதுரை மாவட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தபால் துறை சிறுசேமிப்பு திட்டத்தில் மோசடி

By

Published : Mar 15, 2019, 11:28 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பகுதியில் உள்ள தபால் அலுவலங்களில் சிறு சேமிப்பு திட்டத்தில் அரசு மென்பொருளை தவறாக பயன்படுத்தி சுமார் 1.27 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக புகார் வந்தது.

இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து தபால் மாஸ்டர் வரதராஜன்,தபால் உதவியாளர் முருகேசன் ஆகியோர் மோசடிக்கு உதவியதாக கார்த்திகா உட்பட 3 பேர் மீது கடந்த 2010 ஆம் ஆண்டு கைது செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கானது மதுரை மாவட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி கணேசன், குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details