சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஊழியர்கள் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நீதிபதிகள், ஓட்டுநர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு பல கட்டமாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், நீதிபதிகள் உள்பட 45 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் உட்பட 45 பேருக்கு கரோனா! - Madurai corona updates
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுவரை நீதிபதிகள் உள்பட 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Corona for 45 Madurai High Court employees
இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலுள்ள அரசு வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அரசு வழக்கறிஞர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.