மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கிராமிய நாட்டுப்புற பாடகர்கள் சார்பில் அளித்த மனுவில், "கோயில் திருவிழாக்கள், இதர சுப நிகழ்ச்சிகள், இறப்பு நிகழ்ச்சிகளில் பாடும் கலைஞர்கள், தற்போது கரோனா நோய்ப் பரவல் காரணமாக பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
தீச்சட்டி ஏந்தி வந்து ஆட்சியரிடம் மனு அளித்த நாட்டுப்புறப் பாடகர்கள்...!
மதுரை: கிராமிய நாட்டுப்புற பாடகர்கள் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி தீச்சட்டி ஏந்தி வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வருடத்தில் ஆறு மாத காலம் தான் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும். கரோனா நோய்ப் பரவல் காரணமாக அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் அரசு ரத்து செய்ததால், பங்குனி, சித்திரை , வைகாசி ஆகிய மூன்று மாதங்களிலும், கலைநிகழ்ச்சிகள் ஏதும் நடத்த முடியாமல் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம்.
எனவே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு கோயில் திருவிழாக்கள் நடத்துவதற்கும், சுபநிகழ்ச்சிகளில் எங்களை போன்ற கலைஞர்கள், கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும். எனவே எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குப் போதிய நிவாரணம் வழங்குவதோடு, கோயில் விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் கிராமிய இசைக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் " என்று மனுவில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.