தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை கோயில் திருவிழாவில் தீ விபத்து - உயிர் தப்பிய பக்தர்கள்

மதுரையில் நடைபெற்ற சந்தன மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது, நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் திருவிழா பந்தல் முற்றிலுமாக எரிந்தது.

தீ விபத்து
தீ விபத்து

By

Published : Jun 9, 2022, 1:05 PM IST

மதுரைபெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் சந்தன மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த ஒரு வாரமாக வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் திருவிழாவிற்காக கோயிலைச் சுற்றி பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் விழா கமிட்டி சார்பாக இன்று (ஜூன்9) பட்டாசு வெடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, பட்டாசுகள் வெடித்தபோது, அதில் இருந்து வந்த தீயானது பந்தலில் பட்டு எரியத் தொடங்கியது.

கோயில் திருவிழாவில் கொலுந்து விட்டெரிந்த தீயினால் உயிரிழப்புகள் ஏதுமின்றி உயிர்த் தப்பினர்

இதில் பக்தர்களின் வாகனங்களும் எரிந்து சேதமானது. கோயிலைச் சுற்றி இருந்த பழைய இரும்பு பொருட்கள் விற்பனை கடைகளும் முழுமையாக எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட தீயால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதையும் படிங்க: ’இறந்தவர்களின் உடல்களை புதைக்க சுடுகாடு இல்லை’ - பட்டியலின மக்கள் ஆவேசம்

ABOUT THE AUTHOR

...view details