தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி வீராங்கனை மனு - பாரா ஒலிம்பிக்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஏப்.27ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள மாற்றுத்திறனாளி வீராங்கனையான பாத்திமா பீவி, போட்டியில் பங்கேற்க உதவக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (மார்ச் 28) மனு அளித்தார்.

பாத்திமா பீவி
பாத்திமா பீவி

By

Published : Mar 28, 2022, 11:03 PM IST

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 28) ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி டேபிள் டென்னிஸ் வீராங்கனையான பாத்திமா பீவியும் வந்திருந்தார். கணவனை பிரிந்து வாழும் பாத்திமா பீவி கடந்த 15 வருடங்களாக பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

ஆட்சியரிடம் மனு: தமிழ்நாடு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேசிய மற்றும் மாநில, மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ், தட்டு எறிதல், ஈட்டி ஏறிதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 12ஆம் தேதி மாநில அளவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார். அடுத்தப் படியாக வரும் ஏப்.27ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளார்.

மாற்றுத்திறனாளி டென்னிஸ் வீராங்கனை பாத்திமா பீவி கோரிக்கை

நடவடிக்கை எடுப்பதாக உறுதி: தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க போதிய பொருளாதார வசதி இல்லாததால் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளியான தனக்கு, ரயிலில் பயணம் செய்வதில் உள்ள கடினம் மற்றும் சிரமங்களை கருத்திற்கொண்டு, உதவியாளர் ஒருவருடன் விமானத்தில் பயணம் மேற்கொள்ள ஆவண செய்யுமாறு தன் மகனுடன் நேரில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளி வீராங்கனை பாத்திமா பீவியின் மனுவைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: 'கீழ்மருவத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details