மதுரை:மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் S. முருகேசன் M.சரஸ்வதி தம்பதியர். இவர்களுக்கு, சுதா, கீதா ஆகிய மகள்களும், மாரிகணேஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் கடைசி பிள்ளையான மாரிகணேஷ்க்கு 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்து, மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மாரிகணேஷ் சிறுவயது முதலே வீட்டில் உள்ள பெற்றோர், சகோதரிகள் மீது அதீத அன்பு செலுத்தியுள்ளனர். சிறுவயதிலிருந்தே புல்லட் பைக் ரேசராக இருந்த மாரிகணேஷ் பதக்கங்கள், விருதுகளும் பெற்றதோடு பல்வேறு போட்டிகளில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு நவ.18 ஆம் தேதி மாரிகணேஷ் உயிரிழந்தார்.