மதுரை:சித்திரைத் திருவிழாவின்போது பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட காவல் துறையின் சார்பாக, கள்ளழகர் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரை காவலன் என்ற செயலியில்Track Alagar என்ற வசதியின் மூலம் பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன் மூலம் அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக 14.4.2022-ம் தேதி அழகர் மலையிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோயில் செல்லும்வரை, ஒவ்வொரு இடத்தையும் செல்போனில் Track Alagar என்ற Link மூலம் Map-ல் தெரிந்து கொள்ளலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமத்தைத் தவிர்த்து கள்ளழகரை தரிசிக்க முடியும்.