தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிவாலய ஓட்டத்திற்கு தேவையான வசதிகள்! - நீதிபதிகள் உத்தரவு! - சிவாலய ஓட்டம்

மதுரை: மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிவாலய ஓட்டத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகளை செய்து தர உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

sivalaya
sivalaya

By

Published : Mar 4, 2021, 1:43 PM IST

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "மகா சிவராத்திரி வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் உள்ளிட்ட 12 கோயில்களில் மகா சிவராத்திரியின் போது சிவாலய ஓட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். பக்தர்கள் 112 கி.மீ தூரத்திற்கு ஓடி அப்பகுதியில் உள்ள 12 கோயில்களிலும் வழிபாடு செய்வது வழக்கம்.

இந்நிலையில், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, மருத்துவம் போன்ற எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக, பக்தர்கள் செல்லக்கூடிய பாதைகள் குண்டு குழியுமாக உள்ளன. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து அறநிலையத்துறையிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்விற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும்" எனக் கேட்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் அடிப்படை வசதிகளையும், கரோனா காலம் என்பதால் மருத்துவ வசதிகளையும், 112 கி.மீ பக்தர்கள் ஓடுவதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் சாலை வசதிகளையும் செய்து தர கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஜெயமால்யதா!

ABOUT THE AUTHOR

...view details