தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நேருக்கு நேர்! திமுகவை விவாதிக்க அழைக்கும் செல்லூர் ராஜூ! - திமுகவினர் விவாதிக்க தயாரா

மதுரை: விவசாயிகளுக்கு செய்தவை குறித்து என்னுடன் நேருக்கு நேராக விவாதிக்க திமுக தயாரா என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வினவியுள்ளார்.

minister
minister

By

Published : Feb 22, 2021, 6:42 PM IST

மதுரை பழங்காநத்தத்தில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடன் வாங்குவதில் தமிழக அரசு சாதனை படைப்பதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார். ஸ்டாலின் தெரிந்துதான் பேசுகிறாரா என்று தெரியவில்லை. முதலீடு செய்ய வேண்டுமென்றால் கடன் வாங்கித்தான் ஆக வேண்டும்.

மக்களை ஏமாற்ற ஏதேதோ நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின். பயிர்க்கடன் தள்ளுபடியில் அதிமுகவினர் அதிக லாபம் அடைந்துள்ளதால கூறும் கே.என் நேருவுக்கு, யார் யார் கடன் பெற்றார்கள் என்ற விவரம் கேட்டால் கொடுக்கப்படும். விவசாயக்கடன் தள்ளுபடியால் அதிமுகவுக்கு கிடைத்த நல்ல பெயரை விரும்பாமல் திமுக அவப்பெயர் ஏற்படுத்துகிறது. அதிமுக ஆட்சியை போல திமுக விவசாயிகளுக்கு ஏதாவது செய்ததுண்டா? விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து என்னோடு விவாதிக்க கே.என்.நேரு, ஏ.வ.வேலு தயாராக உள்ளார்களா?

நேருக்கு நேர்! திமுகவை விவாதிக்க அழைக்கும் செல்லூர் ராஜூ!

அரசியலில் ஊழல் செய்தால் அவர்கள் பாவிகள் தான். பாவிகள் அதிகம் இருப்பது திமுகவில் தான். மதுரையில் திமுக செய்த பல தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வந்தவர் சகாயம். எனவே அரசியலுக்கு வரும் சகாயத்தை வரவேற்கிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:’பாஜகவும் அதிமுகவும் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது'

ABOUT THE AUTHOR

...view details