தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவை நீட்டிப்பு! - தென் தமிழகம்

மதுரை: தென் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்துள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

service
service

By

Published : Jan 23, 2021, 7:03 PM IST

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் தமிழக மாவட்டங்களில் இருந்து, வெளிமாநிலங்களுக்கு செல்லும் சில சிறப்பு ரயில்கள் ஜனவரி மாத இறுதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ரயில்களின் சேவை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

எண் நாள் புறப்பாடு வண்டி சேவை நீட்டிப்பு
1 ஞாயிறு மற்றும் வியாழக்கிழமை நாகர்கோவில் நாகர்கோவில் - மும்பை சிறப்பு ரயில் (06352) 04.02.2021 முதல் 28.03.2021 வரை
2 திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை மும்பை மும்பை - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06351) 05.02.2021 முதல் 29.03.2021 வரை
3 வியாழக்கிழமை மதுரை மதுரை - பிகானீர் வாராந்திர சிறப்பு ரயில் (06053) 04.02.2021 முதல் 25.03.2021 வரை
4 ஞாயிற்றுக்கிழமை பிகானீர் பிகானீர் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (06054) 07.02.2021 முதல் 28.03.2021 வரை
5 வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் ராமேஸ்வரம் - ஓகா வாராந்திர சிறப்பு ரயில் (06733) 05.02.2021 முதல் 26.03.2021 வரை
6 செவ்வாய்கிழமை ஓகா ஓகா - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (06734) 09.02.2021 முதல் 30.03.2021 வரை
7 ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி திருநெல்வேலி - பிலாஸ்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (06070) 07.02.2021 முதல் 28.03.2021 வரை
8 செவ்வாய்கிழமை பிலாஸ்பூர் பிலாஸ்பூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06069) 09.02.2021 முதல் 30.03.2021 வரை
9 புதன்கிழமை திருநெல்வேலி திருநெல்வேலி - மும்பை தாதர் வாராந்திர சிறப்பு ரயில் (06072) 03.02.2021 முதல் 31.03.2021 வரை
10 வியாழக்கிழமை மும்பை தாதர் தாதர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06071) 11.02.2021 முதல் 01.04.2021 வரை
11 வெள்ளிக்கிழமை புவனேஸ்வர் புவனேஸ்வர் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (08496) 05.02.2021 முதல் 26.03.2021 வரை
12 ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் ராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில் (08495) 07.02.2021 முதல் 28.03.2021 வரை

இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என்றும், இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாகவும் தென்னக ரயில்வேயின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தலைக்கவசம் ஏன் முக்கியம்? - சிறப்புக்கட்டுரை

ABOUT THE AUTHOR

...view details