தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொறியியல் பட்டதாரி கொலை வழக்கில்; 12 பேருக்கு ஜாமீன் மறுப்பு!

மதுரை: ஓமலூர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொலை

By

Published : Jun 28, 2019, 10:23 AM IST

Updated : Jun 28, 2019, 1:23 PM IST

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் 2015இல் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், ஜோதிமணி உட்பட 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் ஜோதிமணி இறந்துவிட்டார்.

இந்த வழக்கு நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் இவ்வழக்கு வன்கொடுமைகளை விசாரிக்கும் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய அமுதரசு தலைமறைவாக இருக்க, செல்வராஜ் ஜாமீனில் உள்ளார். யுவராஜ் உட்பட 14 பேரும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் முதன் முறையாக விசாரணைக்கு வந்தபோது யுவராஜ் உட்பட 14 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். செல்வராஜ் நேரில் ஆஜரானார். பின்னர் யுவராஜை திருச்சி சிறையில் அடைக்கவும் மற்ற 13 பேரை மதுரை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கை நீதிபதி தனசேகரன் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் விசாரித்தார். அப்போது யுவராஜ் திருச்சி சிறையில் இருந்தவாறும், மற்ற 13 பேரும் மதுரை சிறையில் இருந்தவாறும் ஆஜர்படுத்தப்பட்டனர். மதுரை சிறையில் இருக்கும் குமார் என்ற சிவக்குமார், சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சந்திரசேகரன், பிரபு, கிரிதரன், சுரேஷ் ஆகியோர் சார்பில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்குப்பின் தற்போதைய சூழ்நிலையில் 12 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Last Updated : Jun 28, 2019, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details