தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் தேர்வுக்கு முழுமையான பயிற்சி- அமைச்சர் அன்பில் மகேஷ் - அமைச்சர் அன்பில் மகேஷ்

நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு முழுமையான பயிற்சி- அமைச்சர் அன்பில் மகேஷ்
நீட் தேர்வுக்கு முழுமையான பயிற்சி- அமைச்சர் அன்பில் மகேஷ்

By

Published : Mar 31, 2022, 8:04 PM IST

மதுரை:மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வுக்கு தயாராகும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம்.

நீட் தேர்வுக்கு முழுமையான பயிற்சி- அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் நபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.

மதுரையில் கட்டப்பட்டுவரும் கலைஞர் நூலகத்தை பார்வையிட்ட அன்பில் மகேஷ் அதன் வசதிகளையும், கட்டமைப்புகளும் மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இது பயன் உள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

கலைஞர் நூலகம் கட்டட பணிகள் பார்வை

இதையும் படிங்க:இலங்கைத் தமிழர்களுக்கும் சம உரிமை - பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details