மதுரையில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக தொழில்முனைவோருக்கான மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குநர் நாகராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மதுரை காமராசர் பல்கலை.யில் தொழில் துறை மேம்பாட்டு மையம்! - Madurai university start EDII centre
மதுரை: பொறியியல் அல்லாத பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டில் முதல்முதலாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்தான் தொழில் துறை மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், "பொறியியல் அல்லாத கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக தொழில் துறை மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் உயர் கல்வியில் படித்த படிப்பின் மூலம் அவர்களுடைய கண்டுபிடிப்பு மக்களைச் சென்றடையச் செய்யும். இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளிலிருந்து 50 விழுக்காடு மாணவர்கள் பங்குபெற்று வெற்றிபெற்றாலே போதுமானது" எனத் தெரிவித்தார்.