தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவே வெற்றி பெறும்! - சசிகலா தம்பி திவாகரன் - திவாகரன்

மதுரை: வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெறவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சசிகலாவின் தம்பியும் அம்மா திராவிடர் கழகப் பொதுச்செயலாளருமான திவாகரன் தெரிவித்துள்ளார்.

divakaran
divakaran

By

Published : Oct 29, 2020, 5:09 PM IST

அம்மா திராவிடர் கழக சிவகங்கை மாவட்ட செயலாளர் கருப்பையாவின் இல்லத் திருமணத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் இன்று மதுரை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ” சசிகலாவை வைத்து இங்கிருக்கும் சிலர் கண்ணாமூச்சி விளையாடிவிட்டார்கள். அவர்கள் செய்த தவறுக்கு, என் சகோதரி சிறைவாசம் அனுபவிக்க நேரிடுகிறது.

சசிகலாவின் முயற்சியால்தான் தற்போது அதிமுக பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி நான்காண்டுகளாக ஆட்சியையும் கட்சியையும் கட்டிப் பாதுகாத்துள்ளார். ஜெயலலிதாவின் இறப்பு குறித்த ஆறுமுகசாமி ஆணையம், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடம் மட்டுமே இன்னும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவே வெற்றி பெறும்! - சசிகலா தம்பி திவாகரன்

திருமாவளவன் பெண்களை மதிக்கக்கூடியவர். அவர் எந்த இடத்திலும் பெண்களை அவதூறாக பேசவில்லை. இன்றுள்ள சூழலில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளன ” என்றார்.

இதையும் படிங்க: கரோனாவிலும் தோற்று கனமழைக்கும் தோற்று நிற்கிறது அதிமுக அரசு!

ABOUT THE AUTHOR

...view details