தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கீழடி அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு- தமிழச்சி தங்கப்பாண்டியன் வரவேற்பு - keezhadi excavation funds allotment

மதுரை: கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்தார்.

tamilachi thangapandian

By

Published : Nov 2, 2019, 12:16 PM IST

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இதுதொடர்பாக பேசியதாவது:

"திமுக தலைவர் ஸ்டாலின், கீழடி பகுதியை மிக சமீபத்தில் சென்று பார்வையிட்டு, தமிழருடைய வரலாற்று உணர்வைப் மிக பெருமிதத்துடன் பதிவு செய்தார்.

மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி கீழடி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியை எடுக்க வேண்டும்.

அவ்வாறு ஆரோக்கியமான நல்ல விஷயங்களை பாராட்டும் நபராக நான் இருப்பேன். அதைப்போல், தமிழர்களுடைய வரலாற்றுப் பெருமையை உலகிற்கு அறிவித்து கொண்டிருக்கின்ற கீழடி ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். கட்சியை கடந்து தமிழர்களுடைய பெருமையை நிலை நாட்டுவதற்கான எந்த ஒரு முயற்சியையும் திமுகவும் அதன் தலைவரும் பாராட்டுவதில் தவறுவது கிடையாது.

இவ்வாறு தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்தார்.

அப்போது, கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லையே என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, “அதற்காகதான் மத்திய அரசிடம் மாநில அரசு அழுத்தம் கொடுத்து அதற்கான நிதியை பெற வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது” என்றார்.

மதுரை விமான நிலையத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேட்டி


மேலும் படிக்க:கீழடி அகழாய்வு பொருட்கள் பிரமாண்ட கண்காட்சி: தொடங்கிவைத்த முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details