தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளுவதை தடுக்காத  ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும்

தமிழ்நாட்டில் மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 29, 2022, 5:23 PM IST

மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளுவதை தடுக்காத ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும்

மதுரை: மனிதர்களை கொண்டு மலம் அள்ளுதல், பாதாள சாக்கடையை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளாமல் ரோபோட் மற்றும் நவீன எந்திரங்களைக் கொண்டு செய்ய கோரிய வழக்கு விசாரணையில், அந்தந்த மாவட்டங்களில் மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த பொது நல மனுவில், "2013ஆம் ஆண்டு கைகளால் மலம் அளுவதை தடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பொழுது பல தூய்மை பணியாளர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்பும் பல தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடை, சாக்கடைகள் சுத்தம் செய்யும் பொழுது உயிரிழந்துள்ளனர்.

தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பை குறைக்க பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, குப்பை அள்ளுவது உள்ளிட்ட பணிகளை நவீன எந்திரங்கள் கொண்டும், ரோபோட் பயன்படுத்தியும் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, 2013ஆண்டு சட்டத்தின் படி மனிதர்களை கொண்டு மலம் அள்ளுதல், பாதாள சாக்கடை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை ரோபோட் மற்றும் நவீன எந்திரங்களைக் கொண்டு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று (செப்.29) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் சமர்ப்பித்துள்ள புகைப்படம் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். புகைப்படம் குறித்த தகவல் உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்படும்.

மனுதாரர் சமர்பித்த புகைப்படத்தில் தவறு இருக்கும் பட்சத்தில் அவருக்கு ரூ.1 லட்சம் வரை அபதாரம் விதிக்க நேரிடும் என்று எச்சரித்தனர். இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அலட்சியம் காட்டுகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என்று தெரியவில்லை. இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் முழுமையான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று தெரிவித்தனர். அதோடு வழக்கு விசாரணை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்பின் ஊர்வலம் பேரணிக்கு அனுமதி கிடையாது - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details