தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சீட்டு கம்பெனிகளுக்கு 18% ஜிஎஸ்டி வரியிலிருந்து தளர்வு அளிக்க கோரிக்கை

அங்கீகாரம் பெற்ற சீட்டு கம்பெனிகளுக்கு 18% ஜி.எஸ்.டி. வரி உயர்வை முழுவதுமாக தளர்த்தவேண்டும் என மதுரை ராமநாதபுரம் மாவட்ட சீட்டு கம்பெனிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரி
ஜிஎஸ்டி வரி

By

Published : Jul 12, 2022, 3:38 PM IST

மதுரை மாட்டுத்தாவணி எதிரே உள்ள மதுரை செய்தியாளர்கள் அரங்கத்தில் மதுரை, ராமநாதபுரம் மாவட்ட சீட்டு கம்பெனிகள் சங்கம் சார்பில் சங்கத்தின் நிர்வாகிகள் பரத் சிங், வேல்முருகன், புருஷோத்தமன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது, 'வங்கிகளில் நிதி உதவி கிடைக்காத சிறுபான்மை மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்களுடைய தொழில் துவங்குவதற்கும் தொழிலை மேம்படுத்துவதற்கும் சீட்டு கம்பெனிகளில் ஏலச்சீட்டுகள் மாத குலுக்கல் சீட்டுகள் போன்ற சீட்டுகளில் சேர்ந்து தங்களது பொருளாதார தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இத்தகைய பொருளாதார சேவையை செய்து வரும் சீட்டு கம்பெனிகள் நடத்தும் சீட்டு நிதியங்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை அரசு 18 சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறது. இந்த ஜிஎஸ்டி வரி உயர்வு முழுவதும் பொதுமக்களை மட்டுமே பாதிக்கும். ஆகவே, இதை முழுவதுமாக நீக்க வேண்டும். மேலும், அங்கீகாரம் பெறாத சீட்டு கம்பெனிகள் பல மோசடிகள் செய்கிறது.

மத்திய அரசு விதித்துள்ள 18% ஜிஎஸ்டி வரியிலிருந்து தளர்வு அளிக்க கோரிக்கை

இவையெல்லாம் செய்திகளாக வெளிவரும்போது அங்கீகாரம் பெற்ற சீட்டு கம்பெனிகள் மோசடி செய்ததா அங்கீகாரம் பெறாத சீட்டு கம்பெனிகள் மோசடி செய்ததா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதத்தில் செய்திகளை வெளியிட வேண்டும். அங்கீகாரம் பெறாத சீட்டு கம்பெனிகளில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த ஜி.எஸ்.டி. வரி கிடையாது.

ஆனால், அவர்களின் பணத்திற்கு உத்தரவாதம் இருக்காது. ஆகவே, அங்கீகாரம் பெற்ற சீட்டு கம்பெனிகளுக்கு இந்த ஜி.எஸ்.டி. வரி உயர்வை முழுவதுமாக தளர்த்த வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 70 வயது மருத்துவரிடம் ரூ.1.80 கோடி மோசடி - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ABOUT THE AUTHOR

...view details