தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் - பொருள்கள் விநியோகம் பாதிப்பு - Strike by ration shop workers in Madurai on June 7th

ரேஷன் கடை ஊழியர்கள் இன்று (ஜூன் 7) முதல் மூன்று நாள்கள் 11 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் பொருள்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளன.

ரேஷன் கடை
ரேஷன் கடை

By

Published : Jun 7, 2022, 2:36 PM IST

மதுரை:தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மூன்று நாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, நியாய விலைக் கடைப் பணியாளர் சங்கத்தினரின் வேலைநிறுத்தம் இன்று (ஜூன் 7) தொடங்கியது. இதனால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது தடைபட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

11 அம்ச கோரிக்களை முன்னிறுத்தி வேலை நிறுத்தப்போராட்டம்
இதற்கிடையே தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில், பழங்காநத்தம் அருகே 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் செல்லத்துரை பேசுகையில், 'பொது விநியோக திட்டத்துக்கு என்று தனித் துறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 % அகவிலைப்படியை உடனே வழங்கவேண்டும், அரசு பணியாளர்களுக்கான 31 % அகவிலைப்படி வழங்க வேண்டும், நியாயவிலை கடைகளில் புதிய 4 ஜி சிம் வழங்க வேண்டும், இணையதள சேவையை மேம்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன், செல்லத்துரை உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ரேஷன் கடை கதவை உடைக்க முயற்சிக்கும் கரடி!

ABOUT THE AUTHOR

...view details