மதுரை: திருமங்கலம் அருகே சவுடார்பட்டி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் அரவிந்த்குமார் (30). இவர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுங்கச்சாவடி ஊழியர்கள் இவரிடம் சுங்க கட்டணம் கேட்டுள்ளனர்.
திருமங்கலம் நகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுங்கச்சாவடி இருப்பதால் அதனை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். மேலும், திருமங்கலம் நகர் பகுதியில் மட்டும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு உள்ளது. இருப்பினும் அடிக்கடி சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த நிலையில், அரவிந்தன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தபோது சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டதால், காரை அங்கேயே நிறுத்தி விட்டு சென்றுள்ளார். மேலும், நேற்று இரவு தனது காரை எடுக்க சென்றார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் திருமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளோம். அங்கு சென்று அனுமதி பெற்று கொள்ளுங்கள் என்று கூறி காரை எடுத்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.