மதுரை: வழக்கறிஞர் உக்கிரபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "கரோனா தொற்றின் காரணமாக 2020 ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.
பின்பு படிப்படியாகத் தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்தப் பணி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோன்று வழக்கறிஞர்கள் அறையும் திறக்கப்படவில்லை.
ஆன்லைன் வழக்கு விசாரணையால் இளம் வழக்கறிஞர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்கள் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறையில் அமர முடியாமல் உள்ளனர். வழக்குத் தொடர்பான ஆவணங்களைப் பெற முடியாமலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.