திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமி, கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறுமியின் வீடு அருகே வசித்துவரும் ஒருவர் கைதுசெய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில் சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாததால் கைதுசெய்யப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல்செய்யபட்டது.
மரபணு சோதனை நடைபெற்றதா?
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன், "சிறுமியை கடைசியாகப் பார்த்த நபர் முறையாக விசாரிக்கப்படவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டிலிருந்து டீ-சர்ட், சிவப்பு நிற உள்ளாடை, கைக்குட்டை ஆகியவை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை கிராம நிர்வாக அலுவலர் குறிப்பிடவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட சிவப்பு நிற உள்ளாடை மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதா எனச் சந்தேகம் எழுகிறது. ஆகவே, அந்நபரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதிசெய்யப்படுகிறது" என உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உலியத்துக்கடவு - உப்பைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கிய பூமி