மதுரை: கரோனா தொற்று சமீப நாட்களில் மீண்டும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பரவல் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு மக்கள் அதிகமாகக்கூடும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட, உள்ளூர் பக்தர்கள் என நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், கரோனா பரவலை கட்டுப்படுத்தல் நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.